Pages

20 குழந்தைகளின் 'அம்மா' ஹன்ஸிகா!

திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான 'அம்மா'வாக மாறியிருக்கிறார் இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி.
இருங்க இருங்க... ஏதும் வில்லங்கமா கற்பனை பண்ணிக்காதீங்க... 20 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தாயாக மாறியுள்ளார் ஹன்ஸிகா.தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளவர் ஹன்ஸிகா. அடுத்து இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு

இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா!

15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில், விவாகரத்து செய்தார் பிரபு தேவா. முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபு தேவா. சமீபத்தில்தான் ரம்லத் - பிரபு தேவா விவாகரத்தை அறிவித்தது

காஞ்சனா ஜெயித்ததால் லாரன்ஸுடன் நெருக்கம் காட்டும் லட்சுமி ராய்‍!

காஞ்சனா படத்தில் ஜோடியாக நடித்த லாரன்சுக்கும் லட்சுமிராய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசு கிசுக்கள் பரவியுள்ளன. காஞ்சனா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது .இதனால் படத்தில் ஜோடியாக நடித்த ராகவா லாரன்ஸ் - லட்சுமி ராய் இடையே காதல் என கிசுகிசு கிளம்பியுள்ளது.
இதுபற்றி லட்சுமிராய் கூறுகையில், "லாரன்சுக்கும் எனக்கும் காதல் என்பதை கேட்கும் போதே சிரிப்புதான் வருகிறது. ஒரு ஜோக்காக இதை எடுத்துக் கொள்கிறேன்.எல்லாரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். லாரன்ஸ் எனக்கு நல்ல நண்பர். உண்மையிலேயே நண்பர். நல்ல

டோனியுடன் அசத்திய அசின்

இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வரும் தோனி, விளம்பர உலகின் விருப்ப நாயகனாகவும் திகழ்கிறார். சமீபத்தில் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாசுவுடன் இணைந்து "ஷூ' விளம்பரத்தில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது நடிகை அசினுடன் ஜோடி சேர்ந்து இன்னொரு விளம் பரத்தில் கலக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் தோனி. "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற பின், இவரது புகழ் பன்மடங்கு உயர்ந்தது. விளம்பரநிறுவனங்கள் இவரை தேடி வந்தன. ஒரு நிறுவனத்துக்கு "மாடலாக' தோன்ற பல கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார்.